கட்டற்ற தொழில்நுட்பத் தமிழ் மாநாடு ஜூலை 4-5, 2020

04 Июл - 05 июля, 2020

10:00 - 18:30 UTC+08:00

In your timezone:

Event expired

Location

This is an online-only event

Description

மலேசிய உத்தமம், ஓம்தமிழ் ஏற்பாட்டில், கணியம் அறக்கட்டளை, தித்தியான் டிஜிட்டல், மொசில்லா தமிழ் குழுமம், உபுண்டு தமிழ் குழுமம், தமிழ் லிப்ரெஓபிஸ் இணை ஏற்பாட்டில் தமிழில் உலகின் முதலாவது “கட்டற்ற தொழில்நுட்ப மாநாடு” இணையம் வழி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

ஆண்டிராய்டு, பைதான், மொசில்லா, இணையப் பாதுகாப்பு, கணினி மொழியியல், கணினி அறிவியல், செயற்கை நுண்ணறிவு, பொருட்களின் கணினி போன்ற தலைப்புகளில் கணிஞர்கள் படைப்பினை வழங்குவர். சில படைப்புகள் பட்டறைகளாக நடத்தப்படும். மாநாட்டு பேராளர் கட்டணம் இலவசம். மின் சான்றிதழும் வழங்கப்படுகிறது.

Goals

இம்மாநாடு எதிர்வரும் ஜூலை 4 தொடங்கி ஜூலை 5, 2020 வரை இயங்கலையில் நடைபெறும். இம்மாநாட்டில் பல்கலைக்கழக, ஆசிரியர் பயிற்சி கழக விரிவுரையாளர்கள், முனைவர், முதுகலை, இளங்கலை பட்டப்படிப்பு மாணவர்கள், தமிழ் கணிம ஆர்வலர்கள் ஆகியோர் கலந்து பயன்பெறுவர்.

இம்மாநாட்டினை உலகளாவிய நிலையில் இருக்கும் கணிஞர்கள் நடத்தவிருக்கின்றனர். இதன் வழி இங்கிருக்கும் மாணவர்களும் ஆசிரியர்களும் மிகுந்த பயனைடைவர் என்பது திண்ணம்